வெற்றியின் புரிதல்

நலம்விரும்பிக்கு,

என் பாசத்திற்குரிய நண்பர்களே ஒரு வெற்றியென்பது, புகழ்பெற்ற நடிகர் மாதிரி பல கோடி ரூபாய்கள் சம்பளம் பெற்று, லட்சகணக்கான விசிறிகள் இருப்பதும், எலான் மஸ்க் மாதிரி லட்சக்கணக்கான கோடிகளை ஒரு நிறுவனத்திலும் பங்குகளிலும் முதலீடு செய்வது மட்டுமல்ல.

ஒரு பூ வித்தாக மண்ணில் முளைத்து, துளிர்விட்டு, அதிலிருந்து இலைகளும், தண்டுகளும், பூக்களும் வளர்வது கூட வெற்றிதான்.

ஒரு மனைவியைப்போல் ஓயாமல் பூமியும் தன் அச்சில் சுழன்றுகொண்டு, குடும்பத்தலைவனான சூரியனையயும் ஒரு சொட்டுக்கூட காதல்குறையாமல் தன் ஆயுட்காலம் முழுவதும் சுற்றி வருவதுதான்.

விந்தில் இருந்து அண்டத்திற்கு மாற்றலான உயிர்த்திரவம் ஒன்று பெண்ணில் கருப்பையில் கருப்பிண்டமாக தோற்றம்பெற்று, சிசுவாக உயிரிப்பெற்று, பத்தாம் மாதம் தாயின் வயிற்றிலிருது வெளிவந்து, முதன்முதலாக பூமியில் தன் சொந்தக் கால்களால் நடக்கப் பழகும் அந்த மழலை முயற்சியும்தான்.

தன் குரல் அழகாக உள்ளதா? இல்லையா? தான் அழகாக இருக்கிறோமா? இல்லையா ? என்பது பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் சூரியன் கக்குகிற வெயில்வெளிச்சம் வந்தால் போதும், ஆற்றில் போடும் துடிப்புபோல் காற்றில் தன் சிறகுகள் அசைத்துப் பறக்க வானவெளி திறந்திருந்தால்போதும் என்ற கிடைக்கும் வசதியை வைத்து, பறந்துகொண்டே ஆனதமாகப் பாடுகிறகுயிலுக்குப் பாடிப் பறந்து, தன் இசையை ஒவ்வொரு ஜீவராசிகளின் காதில் கேட்கச்செய்வதுதான் வெற்றி.

காக்கை கொக்கின் நிறத்தைப் பார்த்து, அங்கலாய்ப்பதுபோல் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு முயற்சிக்காமல் இல்லாததை எண்ணி கும்பகர்ணன் குறட்டைவிடுவது ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தால் வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும்.

பாட முயற்சிக்கும்ம்போது, எல்லோராலும் எஸ்.பி.பி, ஆக முடியாது. அவரது குரலில் உச்சத்தைத் தொடமுடியாது ; ஆனாலு, எஸ்பிபிக்கும் ஒரு குரல் உச்சம் இருந்திருக்கும் அல்லவா? அதற்காக அவர் தன் அரிச்சுவடியில் இருந்து முயற்சித்திருப்பார் அல்லவா?

எல்லா வசதியும் இருந்தும் சாதிப்பவன் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுவது ஆச்சர்யம் அல்ல; எந்த ஒரு வசதியும் பின்புலமும் வாரிசு அடையாளச்சான்றிதழும் இல்லாமல் தன் சொந்தத் திறனையும் உழைப்பையும் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி தான் எடுத்துஸ்கொண்ட செயலில் திருத்தமாக எவன் செய்துமுடித்ததாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறானோ…அல்லது அதில் தன் முழுக்கவனத்தையும் குவித்து, யாருடைய ஒத்துழைப்புமின்றி, தான் ஏற்றுக்கொண்டசெயலை கருமமே கண்ணாயிருந்து, வெற்றிபெறத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறானோ அவனே வெற்றியாளன்.

அதை விடுத்து, நீங்கள் ஒரு கோடு போட்டு, அதில் கற்பனை புகுத்தி, இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம்,இது அந்த மாதிரி, அது எப்படி என விமர்சிப்பது எல்லாம் சரிதான்! ஒருவர் அதைச் செய்ய அவருக்குண்டான சூழல், இடம், பொருள், ஏவல் அனைத்தும் முக்கியம். தனக்குள்ள வசதிக்கு பொருளாதாரச் சூழலுக்கு ஆட்பட்டு ஒருவர் முயற்சிக்கும்போது, அதில் நிறைகுறைகள் இருக்கும்! ஒரு குழுவாகப் பெரும் முதலீட்டில் ஒரு தொழில் செய்வதற்கும் சிறுமுதலீட்டில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

சிறுகுறு முதலீட்டை ஆதரித்தால் அது பெரு முதலீட்டு நிறுவனமாக குறுகிய காலத்தில் வளர்ச்சியடையலாம் அல்லவா?

ஏனென்றால் எறும்பு அதன் கைகால் அளக்கும்போது அதற்கு எண்ஜான் அளவு வரும்.

முதலில் மற்றவரை அவரிடத்தில் வைத்துப் பார்த்தால், அவரது சூழலை கடனதுவந்த பாதையை ஆராய்ந்தால் அவரது முயற்சியின் தொடரோட்டம் சீராகத்தான் இருக்கும். அது வெற்றியை நோக்கித்தான் இருக்கும்! அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

சினோஜ் #sinojarticles #சினோஜ்கட்டுரைகள்

06-05-22

பின்னூட்டமொன்றை இடுக