நண்பர்களே நான் தவம்புரிந்த இடம் இது….

நலம் விரும்பிக்கு, #copyright கட்டளைக்கலித்துறை வண்ண அழகில் பூக்களைத் தருமோர் வடிவினில்நீ திண்ணப் பழம்தரும் கோடி தருக்களின் நிஜமும்நீ. திண்ணைப் போலிடம் தந்தெம் குணத்தையும் ஆட்கொணர்பவள் விண்ணாளும் மால்போல் படமெடுத் தாடும் மரச்சிலையே! ( சினோஜ் மரபுக்கவிதைகள்) தமிழறிஞர் வ.வே.சு. ஐயரின் ஒருபுளிமரத்தின் கதை என்ற சிறுகதை நம் மனதை உலுக்கியெடுக்கும். அதேபோல் இந்த உலகில் … நண்பர்களே நான் தவம்புரிந்த இடம் இது….-ஐ படிப்பதைத் தொடரவும்.

என் இளவயதின் முதிர் தத்துவம்….

நலம்விரும்பிக்கு, ((’’இந்த வயதில் இவன் என்ன எழுதுகிறான்’’? என்று கேட்டவர்களுக்கான எனது பதிலிது… )) யாப்பிலக்கணம்: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.. நாளும் பாடும் பூங்குயிலதன்   பாட்டும் நமக்கு விருந்தாகும். கேளாய் குழந்தை ஆராரோ அம்மா வின்பா மரப்பாட்டாம்…!! முள்ளாய் இருந்த மனமதிலே பஞ்சு போல நல்லன்பு தெள்ள முதமாய் விளைந்திட்டால் செல்லாக் காசு போலிங்குத் துளிர்க்கும் … என் இளவயதின் முதிர் தத்துவம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொழில்நுட்பச் சாதனங்கள்.. அதனால் பாதிக்கப்படுவது யார்?

(எண்சீர் கழிநெடிலடி விருத்தம் ) பயமென்பதை அறிந்திடாத ஆண்மை யைத்தா! ஆகாயத் தைமுட்டுகின்ற அறிவைத் தா!எம் புயம்கொண்டு உழைக்கின்ற பெலனை இன்று முதலுற்சா கமாகத்தந் திடம்மா ! உள்ளம் அயர்ச்சியென்ற பழக்கத்தைத் தரும்முன் அதை அழித்திடுமோர் செய்நேர்புத் தியையும் தா ! எம் மயங்காத விழிகளோடு திசைகள் தோறும் சென்றுவெற்றி தன்னைவிதைக்கும் பேற்றைத் தாயேன் ! … தொழில்நுட்பச் சாதனங்கள்.. அதனால் பாதிக்கப்படுவது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நலம் விரும்பிகளுக்கு எனது நிருபம்….

நலம்விரும்பிக்கு, காற்றிடிலடித்துச் செல்லப்படும்  கவிதைக் காகிதங்களைப் பார்த்தீர் களேயானால் அதைக் கையில் எடுத்து உங்களின் இதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழுக்கு மூப்பென்பது இல்லையாதலால் இதைச் சொல்லுகிறேன். ஒரு ஓவியனாகவும் ஒரு கவிஞாகவும் இந்த உலகத்தை நான் பார்க்கிற விதத்தில் ஒவ்வொருநாளும் என்னைநானே ஆக்கினைக்குள் இடப்படுவதுபோல் நானே என்னைச் சுயப்பரிசோதனை செய்துகொள்கிறேன். நானுட்பட எந்தவொரு கவிஞனின் பாடல்களும் கடவுளின் … நலம் விரும்பிகளுக்கு எனது நிருபம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிழலுருவத்தின் குறியீடு

நலம் விரும்பிக்கு, என்னுருவத்தையொத்த நிழலும் வேறொருவரைப் போலவே அசைந்து மண்ணில் தள்ளாடி மடிவதுபோல் விழுகிறது…. சிலநேரங்களில் என்னுருவத்தை மறைப்பதுபோலும் சில பேருருவங்கள் என்னை பிரம்மிக்கச் செய்கிறது… ஒரு மதுகுடித்து வெறித்தவனைப்போலவும் அது தள்ளாடி நிலவின் மீது சாபத்தை அள்ளித்தெளிப்பதாக அது சற்றுத் தரையில் ஓய்வெடுக்கிறது…. நான் நிதானமாய்ப் பார்க்கையில் ஆறிலிருந்து அறுவதுவரையிலான மனித வாழ்க்கைப் பதிவுகள் … நிழலுருவத்தின் குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

®எனது நண்பனும் என் படைப்புகளின் பாராட்டுத் தலைவனும் !!

நலம் விரும்பிக்கு, © இந்தத் தலைப்பு உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் இதில் என் நெஞ்சைத் தொட்டு என் பேனாவின் உயிரைத்தொட்ட சம்பவம் குறிப்பிட்டுள்ளேன். நான் கல்லூரிக்குச் சென்றபோது என் வயதில் யாராவது வருவார்களா வந்து சேர்வார்களா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நான்கைந்து வருடங்கள் வீட்டில் வறுமையின்பொருட்டு வேலைக்குச் சென்று சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு, … ®எனது நண்பனும் என் படைப்புகளின் பாராட்டுத் தலைவனும் !!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொன்ன மாதிரி தினமும் வரும் இரவு… அது நம் தூக்கத்தின் வரவு

நலம் விரும்பிக்கு, திறந்த வீட்டில் செல்லநாய் வருவதுபோல் வராமல் நீ உனக்கான நேரத்தில் வருவதுதான் உலகிலுள்ளோர்க்கும் உன்னை மிகவும்  பிடித்துள்ளது… உன்நேரக்  கண்ணியத்தை எம் மாந்தரினம் கடைபிடிக்க வேண்டுமெனவும் நான் கோரிக்கை வைக்கிறேன்… வெளிச்சத்தை நேசிக்கும் உனக்கு இருளைப் பரிசளித்தவர் யார்? உன் தலைமீது நிலா பள்ளிகொண்டுள்ள அழகியலை நீ உனது இருள்கண்களால் கண்டதுண்டா? காலத்தின் … சொன்ன மாதிரி தினமும் வரும் இரவு… அது நம் தூக்கத்தின் வரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.