கவிஞன்‌

நலம்விரும்பிக்கு,

கவிஞன் நான் – எண் சீர் விருத்தம்


ஆனத்தப் பரவசமாய் என்னுள்ளுள் தேடல்
மிகுகின்ற போதெல்லாம் நெஞ்சுக்குள் இன்பம்
வானத்தைப் பார்க்கின்ற பறவைகளை போலே
காலத்தை அசைபோடும் கவிஞாக நானும்
தேனொத்த இவ்வாழ்க்கைப் பயணத்தில் இன்று
போலென்றும் ரசிப்பதனால் எனக்கொன்றும் துன்பம்
மானாவரி யாய்வீசப் போவதில்லை; என்றோ
படித்தவையும் பார்த்தவையும் மனதிற்குள் சேர்ந்து
கனப்பொழுதும் எனை இயக்கி வருவதனால் என்றும்
கவலையென்னை அசைப்பதில்லை என்றேசொல் கின்றேன்!

பாடிடுவேன் ஆடிடுவேன் நாடகங்கள் செய்வேன்
தெரிந்தவற்றை மற்றவர்க்குக் கூறிடுவேன் கேட்பீர்!
கூடிடுமோர் பிரச்சனைகள் தனுக்குமோர் நல்ல
இடம்கொடுத்து, என்வேலைக்கு மத்தியிலும் அஃதின்
தடம்புரள வைக்கின்ற குணத்திலும் நானும்
திடவுறுதி கொண்டேஅப் பிரச்சனையை தீர்ப்பேன்!
கடம்போன்ற மெல்லிசைகள் காதிரண்டில் கேட்டு,
வடம்போல மக்கள்தேர் தனையழுத்திடு வேனே!
சடம்போல இருக்கின்ற வாழ்க்கையிலே என்ன
வுண்டென்ற கேள்விபோல என்வாழ்வி ருக்கும் !

சினோஜ்

20-08-22.

sinojarticle #Sinojkavithaikal #sinojarts #sinojmusical

பின்னூட்டமொன்றை இடுக