எழுத்துகளும் பேச்சுகளும்

நலம்விரும்பிக்கு

வானத்தை வளைத்துப் போட ஆசைப்படும் கனவுலக நாயகர்களுக்கும் இருக்கின்ற ஒரு சோதனைக்கட்டம் தான் இருக்கிற நிலைமைவிட்டு மேலெழ வேண்டுமென்பதாக இருகிறது.

நீரில் நடந்து செல்லும் நாரைகளைப் போல் இந்தக் கவிவனத்திற்குள் இருக்கிற போது எனக்குள் நானே உலகுவுகிற ஒரு இலக்கியப் போக்கில் என் மனதைத் தொலைத்துவிடுகிறவனாகவே இருக்கிறேன்.

தொலைந்துபோன கனவுகளைத் தேடிவருகிறேன்.

தொலையாத கனவுகளை எனக்குள் பாவாடை நாடா மாதிரி என் மனதிற்குள் இறுக்கமாக கட்டி வைத்திருக்கிறேன்.
என்னவிதமாக எழுத்துகள் எழுத வேண்டுமென யோசிக்காத விடலைப்பருவத்தில் கடவுள் மீதான காதல் பெருகி, உள்ளிருந்து ஊற்றெடுத்து வந்த ஒரு ஆன்மீகத் தேடலும், குடும்பத்தின் கட்டுப்படுத்திவைத்திருந்த அந்த இறையொழுக விதிகளுமாய் சேர்ந்து என்னத் திட்டமிட்டவனாக உருவாக்கியபோது, அந்தக் கவிதைகளுக்கான வார்த்தைகளும், கடிதங்களும், விண்ணப்பங்களும் என் எழுத்துப் பக்கத்தில் வேதனை மெழுகாய் உருகவைத்தது.

வேதப்பிரசன்னம் இளம் வயதில் ஊற்றெடுத்த போதிலிருந்து, பாட்டுப்பவனிகள் உள்ளத்தில் எந்த நேரமும் ராகம் பாடிக்கொண்டிருந்தது.

அதேபோல் சினிமாவின் தாக்கமும் மனதைச் சுண்டியிழுக்கிற இசையார்வமும் என்னிடமில்லாதவற்றையும் தேடச்சொல்லி, உலகப்புறவய விஷயங்களையும், வெளிப்புறம் சொல்லமுடியாத உள்முகமாக அந்தரங்கத்தையும் என்னிடமிருந்து வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே என்னைக் கவியாக்கி என் எழுத்தாற்றலின் நூல் பிடித்து, அது கவிதையாகவோ, கட்டுரையாகவோ, இசையாகவோ, பாடலாகவோ வெளிவருகிறது.

பேசாத பேச்சுக்கு நாம் எஜமான்..ஆனால் சொல்லிய சொல்லுக்கு நாம் அடிமை என்ற சொலவடைக்கேற்ப, இந்தக் காலத்தில் பேசுவதென்பது, நாம் புத்திசாலிகள் என்று இந்த உலகில் நிரூபிப்பதிற்கானவொரு கருவியாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், சில காலத்திற்கு முன்னர் பெரியோர் , ஆசிரியர் ஆகியவர்களுக்கு முன் பேசுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கப்பட வேண்டியதொன்றாக இருந்த காலம் தவறிப்போய், இன்று தனக்கு முன் யாரிந்தாலும், யாரில்லாவிட்டாலும்கூட, எதற்கும் தன் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதென்ற வரையறையின் கீழ், இன்று, பேச்சுரிமை சமூகவளைத உதவியுடன் ஒரு கட்டுப்பாடில்லாத கருத்துச்சுதந்திரம் என்ர பெயரின் கீழ் நம்மை ஆட்கொள்கிறது.

சில தவறுகளும், சில நல்லவைகளும் தான் ஒரு மனிதனை மனிதனிலிருந்து வேறோரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
தவறுகளின்போது, மனசாட்சி மறுதலிக்கிறது. சில நல்லவைகள் செய்யும்போது, தவறுகளே கண்ணில் படுவதில்லை.

இவையிரண்டும் ஒன்றுக்க்கொன்று வேறுபடுவதாயினும், தவறுகள் சட்டேன்று எல்லோரின் கண்களுக்கும் படுவதுபோல் எந்தவொரு நல்லவையும் மற்றவரின் கண்களின் ஏன் படுவதில்லை என்பதுதான் இங்கு கேள்விக்குறியாகிறது.

நல்லதும் பொல்லாததும் இங்கு மனிதனின் இரு சிறுகீரகம்போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது.
தன்னிடமுள்ள நல்லதை முற்றிலும் அழித்துக் கொண்டவர், தீயவனாகிறான்.அவன் தனக்குத்தானே தீ வைத்துக் கொள்வது மாதிரி சமூக விரோதியாகவும் மாறுகிறான்.

தன்னிடமுள்ள தீயதை முற்றிலும் எரித்துக் கொண்டவர், நல்லவனாகிறான். அவன், தனக்குத் தானே, மலர்மாலை சூடிக் கொள்வது மாதிரி சமூகம் என்ற மரத்திற்கு நீரூற்றுகிறான்.

எழுதுவதும் பேசுவதும் எல்லோருக்கும் இருக்கும் உரிமை. இதை எப்படி, எதற்கு வெளிப்பத்துகிறோம் என்பதைப் பொருத்துதான், அது நல்லதா, தீயதா என்பது மற்றவர்களிடமிருந்து விமர்சனமாக வருகிறது.

மனித மனத்தில் மையமிட்டு அமர்ந்திருக்கிற எல்லா விஷயமும் எல்லாக் காலத்திலும் பேசித் தீர்க்க முடிந்திருக்காது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் மீதுள்ள வெறுப்பினாலும் கறுப்பின மக்களுக்கான விடுதலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காரணத்திற்காகவும், விலங்குகளைப் போன்று அவர்களை நடத்திவரும் மனிதத்திற்கெதிரான போக்கிலிருந்து அவர்களை விடுவிக்கவும் வேண்டி, அவர் முன்னெடுத்த விஷயங்களுக்காக அவர் ஜான் வில்கெஸ் பூத் என்ற நாடக நடிகரால் கொல்லப்பட்டார்.

இந்த கறுப்பின மக்களுக்கான விடுதலைக்காக ஆபிரகாம் லிங்கன் கையொப்பமிட வில்லை என்றால் அவரால் அத்தேர்தலில் ஜெயிக்க முடிந்திருக்காது என்ற விமர்சனம் ஒரு பக்கமிருந்தாலும், அவர் அதைச் செய்யமுடியவில்லையெனில் அவர் சார்பாக வேறோரு மகத்தானவர் அந்த மனித நேயத்தை கையில் எடுக்காமலா போயிருப்பார்.

பின் நாட்களில், இருபதாம் நூற்றாண்டின் தோன்றி கருப்பின மக்களின் விடுதலைக்கு குரல் கொடுத்து, காந்தியின் அஹிம்சைக் கொள்கையை ஆயுதமாக்கிக்கொண்டு, பல லட்சக்கணக்கான மக்களுக்காக மக்களுடன் இணைந்து போராடி, எனக்கொரு கனவு உண்டு பேசி, உலகைக் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகை அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார் அல்லவா?

எந்த ஒரு காலத்திலும் எழுத்தும் பேச்சும் ஒருவனை எந்தச் சூழ் நிலையிலிருந்து விடுவிக்கும் பேராயுதம். அதிலும், கவிஞர்களுக்கும், அறிஞர்களுக்கும், அரசியல் தலைவரளுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது இன்றியமையாததாகும். எனவே, தொடர்ந்து எழுதுவோம், பேசுவோம்.

சினோஜ்

10-08-22
11-30-PM

sinojarticles #Sinojkavithaikal #sinojmusical #sinojarts #written #speech

பின்னூட்டமொன்றை இடுக